சர்வதேச கிறிக்கெட் சம்மேளன உறுப்புரிமையில் இருந்து, ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனம் இடைநிறுத்தம்

🕔 November 10, 2023

சிசி (ICC) எனப்படும் சர்வதேச கிறிக்கெட் சம்மேளத்தின் அங்கத்துவத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (Srilanka Cricket) இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் இன்றைய தினம் (10) கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் – அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால், அதன்உறுப்புரிமை நீக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்