பெண் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு மக்களிடம் சிஐடி கோரிக்கை

🕔 November 5, 2023

போலிப் பணப் புழக்கம் தொடர்பாக, சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரைக் கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் நாடியுள்ளனர்.

போலி நாணயத்தாள் புழக்கம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், குறித்த பெண் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (சிஐடி) தேடப்பட்டு வருவதாகவும், அந்தப் பெண்ணுக்கு எதிராக ரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது சந்தேக நபர் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது கோரியுள்ளதுடன், சந்தேகநபர் எங்குள்ளார் என்பது குறித்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைபேசி எண்கள்:

போலி நாணய பிரிவு

பொதுவான தொடர்பிலக்கம் – 011- 2326670

நிலையப் பொறுப்பதிகாரி (OIC) – 071- 8594901

Comments

புதிது பேஸ்புக் பக்கம்