துணிக்கடையில் தீ விபத்து; 17 பேருக்கு காயம்: 06 பேர் நிலை கவலைக்கிடம்

🕔 October 27, 2023

கொழும்பு – பெட்டாவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று (27) ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 17 பேர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 06 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு – பெட்டா 02ஆவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு படையைச் சேர்ந்த 07 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்