சினொபெக் எரிபொருள் விற்பனையை செப்டம்பரில் ஆரம்பிக்கிறது: குறைந்த விலையிலும் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

🕔 August 16, 2023

சினொபெக் நிறுஅரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைவான விலையில் எரிபொருளை விற்பனை செய்ய எதிர்பார்க்கிறது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

சினோபெக் நிறுவனம் எரிபொருள் விற்பனைகளை செப்டம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதற்குள் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடனும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

“சினோபெக்கின் இலங்கை பிரவேசம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இரண்டு சர்வதேச எரிபொருள் நிரப்பு நிலைய விற்பனையாளர்கள் ஒக்டோபர் மற்றும் நொவம்பர் மாதத்துக்கு செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கிறோம்” அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

“சினோபெக்கின் நுழைவு மூலம் நமது அந்நிய செலாவணி மீதான அழுத்தத்தை குறைப்பது எரிபொருள் இறக்குமதியை அதிகரிக்கவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உதவும்” என்றும்அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்