‘ஐஸ்’ வைத்திருந்த பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

🕔 August 11, 2023

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அடுருப்பு வீதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருகொடவத்தை போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்கு அருகில் வைத்து மேற்படி கொன்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சட்டவிரோத போதைப்பொருளை தம்வசம் வைத்திருப்பதோடு, ‘ஐஸ்’ போதைப் பொருளை உட்கொண்டாரா என்பதை அறிய வைத்திய பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments