07 கோடி ரூபா கட்டண நிலுவை; துண்டிக்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலை மின்சாரம்: 02 கோடி செலுத்தியதால் மீளவும் விநியோகம்

🕔 August 11, 2023

துளை போதனா வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகம், மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.க

குறித்த வைத்தியசாலை 07 கோடி (70 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தது.

மின் துண்டிப்பு காரணமாக தாதியர் பயிற்சி மையம், வைத்தியர்கள் தலைமையகம் மற்றும் தாதியர் விடுதிக்கான மின் இணைப்பை நேற்று வியாழக்கிழமை காலை மின்சார சபை துண்டித்தது.

இதனையடுத்து வைத்தியசாலை நிர்வாகம் 20 மில்லியன் ரூபாயினை செலுத்தியதோடு, மீதமுள்ள நிலுவைத் தொகை ஒரு வாரத்திற்குள் செலுத்தப்படும் என்று எழுத்துபூர்வமாக தெரிவித்ததையடுத்து, மீளவும் விநியோகத்தை வழங்க வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.

வைத்தியசாலை நிர்வாகத்தின் இவ்வாறான பொறுப்பற்ற முகாமைத்துவ செயற்பாடுகளினால் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண இணைப்பாளர் டொக்டர் பாலித ரக்கபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, பதுளை போதனா வைத்தியசாலையின் குடிநீர் கட்டணங்கள் உட்பட ஏனைய கட்டணங்கள் 9.8 மில்லியன் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்