லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுவின் விலையைக் குறைத்தது: ஆனால் லிட்ரோ அளவுக்கு இல்லை

🕔 April 4, 2023

லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுவின் விலையை இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு கொள்கலனின் விலை 1,290 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை 3,990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,596 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ நிறுவனமும் எரிவாயு விலையை குறைத்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் புதிய விலை 3,738 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 5 கிலோகிராம் எரிவாயுவின் விலையை 1502 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு விலையை 700 ரூபாவாகவும் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்