ஹரின், மனுஷ ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றம் தடை

🕔 April 4, 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் நுகேகொட மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஒழுக்காற்று குழுவின் தலைவர் ஆகியோருக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2023 ஏப்ரல் 18 ஆம் திகதி வரை இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெனான்டோ மற்றும் மனுஷ நாணயகார ஆகியோர் தற்போது அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்