சட்டபூர்வமாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது: ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆணைக்குழு தலைவர் பதில்

🕔 February 23, 2023

ள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அழைப்பு விடுக்கப்பட்டதாக, தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைமுறைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் இன்று (23) கூறியுள்ளார்.

தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த நிலையில், மேற்படி விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு நிதி வழங்கப்படாமையால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு நாளை வெள்ளிக்கிழமை (24) கூடவுள்ளது.

தேர்தலை ஒத்திவைக்கின்றமை தொடர்பில் நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகள் கோரிய விவாதம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ‘ஒத்திவைக்கப்படுவதற்கு தேர்தல் இல்லை’ என்றார்.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு உத்தேச நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்