தேர்தலை நடத்த போதியளவு பணம் இல்லை: ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு

🕔 February 14, 2023

ள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணமில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (14) நடைபெற்ற போது – அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணம் உண்டா என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் தான் கேட்டதாகவும், அதற்கு போதியளவு பணமில்லை என அவர் பதிலளித்தார் எனவும் அமைச்சர் பந்துல இன்போது குறிப்பிட்டார்.

இந்த நிலைமை குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்