உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

🕔 February 12, 2023


ள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு – திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால், நீதிக்கோரி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“பெப்ரவரி இறுதி வரை – தேர்தல் செலவுக்காக 800 மில்லியன் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை தவணை முறையில் திறைசேரி விடுவிக்க முடியும்.

எனினும் சில நிதிகளை விடுவித்த நிலையில், மார்ச் 09 தேர்தலுக்காக நாங்கள் கோரிய அனைத்து நிதிகளும் விடுவிக்கப்படவில்லை” என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சிடம் தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ள போதும், இந்த கோரிக்கைக்கும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்