தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை

🕔 February 7, 2023

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்த தீர்மானத்தை பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழுவின் ஒறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால், எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஏலவே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டங்களை நடத்துவதற்கான கோரம் 03 பேர் இருந்தாலே போதுமானது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்