தலைப்புச் செய்திகள்

விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் வெள்ளவத்தையில் கைது

Brothel raid - 089விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் காலி வீதி, வெள்ளவத்தையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத நிலையம் எனும் போர்வையில் விபச்சாரத் தொழிலை நடத்தி வந்த 38 வயதுடைய பெண் ஒருவர் உட்பட மொத்தமாக ஐந்து பெண்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான ஏனையவர்கள் 21, 22, 38 மற்றும் 40 வயதுடையவர்கள் என பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

இவர்கள் வவுனியா, புளத்சிங்கள, கொழும்பு – 15 மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மேற்படி சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்படவுள்ளனர்.