சமையல்காரரின் அறிவு கூட, பீரிஸுக்கு கிடையாது: அமைச்சர் ராஜித விமர்சனம்

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு கூறினார்.
அரசியல் அமைப்பு அறிமுகம் செய்வது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, ஜீ.எல்.பீரிஸ் ஓர் செல்லாக்காசு என அமைச்சர் தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் ராஜித மேலும் தெரிவிக்கையில்;
“கடந்த காலங்களில் சமஸ்டி முறைமையை கோரிய முன்னாள் அமைச்சர் பீரிஸ், தற்போது சிங்கள பௌத்த தேசப்பற்றாளராக மாற்றமடைந்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஜீ.எல். பீரிஸுக்கு அமைச்சு பதவி ஒன்றை வழங்கியிருந்தால், புதிய அரசியல் அமைப்புக்காகவும் அவர் குரல் கொடுத்திருப்பார்.
ஜீ.எல். பீரிஸ் பிரபல அரசியல்வாதி என்.எம்.பெரேராவின் மருமகன் என்ற போதிலும், அவரது வீட்டு சமையற்காரனுக்கு இருக்கக்கூடிய அரசியல் அறிவு கூட ஜீ.எல்.பீரிஸிடம் கிடையாது” என்றார்.