
உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்டத்தில் இன்று (05) கட்டுப்பணத்தை செலுத்தியது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி. பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை மாநகர சபைக்காக சுயேட்சைக்குழு ஒன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 18ஆம் திகதி நாட்டின் சபைகளும் உள்ளடங்கும் வகையில் கட்டுப்பணம் செலுத்தவுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணங்களை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கு இன்று தொடக்கம் விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



