டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு

🕔 November 12, 2022

ரிபொருட்கள் சிலவற்றுக்கான விலைகள் நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளன.

அந்த வகையில் டீசல் விலை லீட்டருக்கு 15 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அதன்படி புதிய விலை 430 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 25 ரூபாவினால் அதிகரித்துள்ளது. புதிய விலை 365 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் இல்லை.

நாட்டில் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்