காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு நிலையக் கைதி: வைத்தியசலையில் மரணம்

🕔 November 12, 2022

ந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மோதலின் போது தப்பிச் சென்ற மேற்படி நபர் – காட்டுப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டு பட்டினி நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட மோதலையடுத்து அங்கிருந்து 50 பேர் வரை தப்பிச் சென்றிருந்தனர்.

இருந்தபோதும் மறுதினம் அவர்களில் 35 பேர் சரணடைந்தமை குறிப்பிடத்தக்தக்து.

தொடர்பான செய்தி: கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 35 பேர் சரண்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்