06 உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக சதொச அறிவிப்பு
![](https://puthithu.com/wp-content/uploads/2017/06/Sathosa-977-1024x576.jpg)
லங்கா சதொச நிறுவனம் 06 உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விலைக் குறைப்பு இன்று 19 ஆம் திகதி அமுலுக்கு வருவதாகவும் சதொச தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராமுக்கு என – விலை குறைக்கப்பட்ட 06 பொருட்களின் விவரங்களும் விலைகளும் வருமாறு;
- பூண்டு 60 ரூபா விலை குறைப்பு
புதிய விலை – ரூ. 490. - கோதுமை மா 55 ரூபா விலை குறைப்பு
புதிய விலை – ரூ. 320 - நெத்தலி 50 ரூபா விலை குறைப்பு
புதிய விலை – ரூ. 1,450 - பருப்பு 30 ரூபா விலை குறைப்பு
புதிய விலை – ரூ. 285 - வெள்ளைச் சீனி 15 ரூபா விலை குறைப்பு
புதிய விலை – ரூ. 260 - இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி 05 ரூபா விலை குறைப்பு
புதிய விலை – ரூ. 169