‘பொன்னியின் செல்வன்’ பார்த்தார் மஹிந்த ராஜபக்ஷ

🕔 October 19, 2022

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள திரையரங்கில் இன்று (19) பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது மனைவி ஷிரந்தி மற்றும் ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

மணிரத்னம் இயக்கிய – வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன், உலகளவில் வெளியிடப்பட்டுள்ளதோடு – நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இந்திய மதிப்பில் 200 கோடியை தாண்டிய வசூலைப் பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்தத் திரைப்படத்தில் நடத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்