சேதனப் பசளையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நஷ்டஈடு வழங்குவதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை

🕔 October 19, 2022

சேதனைப் பசளை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திறைசேரி இன்னும் நிதியை விடுவிக்கவில்லை என்று இலங்கையின் விவசாய ராஜாங்க அமைச்சர் இன்று (19) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

சேதன பசளை பயன்படுத்தியமையினால் அறுவடை வீழ்ச்சியடைந்த விவசாயிகளுக்கு தேவையான நட்டஈட்டை வழங்குவதற்கான நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய ராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்தார்.

எனினும் நிதி திறைசேரியினால் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த பதிலை வழங்கினார்.

சேதனப் பசளை பயன்படுத்தியமையினால் நெல் விவசாயத்தில் நஷ்டத்தை எதிர்கொண்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்