அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு பொதுஜன பெரமுன எதிரானது; செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு: பசிலை இலக்கு வைப்பது குறித்தும் கருத்து

🕔 October 19, 2022

ரசியலமைப்பின் 22 வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிரானது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர்; பசில் ராஜபக்ஷவை இலக்கு வைத்து அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது, இரட்டைக் குடியுரிமை கொண்ட புத்திஜீவிகளின் சேவைகளைப் பெறுவதைத் தடுக்கும் என்றார்.

தனிநபர்கள் மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பிரச்சினைகளை 06 மாதங்களுக்குள் தீர்க்கும் வகையில் நாட்டின் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமான அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒருவரையோ, மதத்தையோ குறிவைத்து அல்லது வேறு குறுகிய ஆதாயங்களை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டால் – கட்சி எதிர்க்கும் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி தமது தீர்மானம் குறித்து அவருக்கு அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் காரியவசம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்