உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா: சஜித் கேள்விக்கு நாடாளுமன்றில் சுசில் பதில்

🕔 October 18, 2022

ள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கை உள்ளதா என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதற்கு – அண்மையில் எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்தன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பலர் மேற்படி தீர்மானம் எட்டப்பட்ட கூட்டத்தில்கலந்துகொண்டனர்.

தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் அடிப்படையிலோ அல்லது வேறு காரணங்களினாலோ தேர்தலை ஒத்திவைப்பதை எதிர்ப்போம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கையை எதிர்த்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவு திரட்டுவது என்ற கூட்டு முடிவும் எட்டப்பட்டது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான கட்டுரை: உள்ளூராட்சி உறுப்பினர்கள் தொகையை பாதியாகக் குறைக்கும் ஜனாதிபதியின் அறிவிப்பு: என்ன வகை தந்திரம்?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்