இஸ்மத் மௌலவிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

🕔 October 18, 2022

ஸ்மத் மௌலவியை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இஸ்மத் மௌலவி, இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது

முன்னைய செய்தி

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினர், இஸ்மத் மௌலவியை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகம் சுற்றி வளைக்கப்பட்டமை மற்றும் சட்டவிரோத ஒன்று கூடல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த ஜுலை மாதமும் முன்னரும் இஸ்மத் மௌலவி – அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்