அறபா மாணவர்களுக்கு உள மேம்பாடு மற்றும் ஆத்மீக வழிகாட்டல் நிகழ்வு: பிராந்தியத்தில் முதல் தடவை என பாராட்டு

🕔 October 13, 2022

ட்டாளைச்சேனை அறபா வித்தியாலய ஆண் மாணவர்களுக்கான உள மேம்பாடு மற்றும் ஆத்மீக வழிகாட்டல் நிகழ்வு நேற்று (12) அட்டாளைச்சேனை பலாஹ் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையேற்று நடத்திய இந் நிகழ்வில், கலாநிதி அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். சித்தீக் (அஸ்ஹரி), அஷ்ஷெய்க் ஏ. றயீஸ் முப்தி (ஹாமிதி) ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் அறபா வித்தியாலயத்தின் 260 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கற்றல் முறை, போதைப் பழக்கத்தின் தீமைகள், நல்லொழுக்கம் மற்றும் ஆத்மீக ஈடுபாட்டின் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தும் பொருட்டு, பாடசாலை ஆசியர்கள் பலரும் – களத்தின் நின்று பணியாற்றினர்.

பெருந்தொகையான பாடசாலை மாணவர்களை ஒன்றுதிரட்டி, இவ்வாறானதொரு நிகழ்வு இந்தப் பிராந்தியத்தில் நடத்தப்பட்டமை – இதுவே முதல் தடவை என, நிகழ்வின் வளவாளர்கள் சுட்டிக்காட்டியதோடு, இதனை ஏற்பாடு செய்த பாடசாலை நிருவாகத்தினருக்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வுக்கு ACMYC அனுசரணை வழங்கியிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்