டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு: அதிக ஆபத்துள்ள பகுதிகளாக 36 பிரிவுகள் அடையாளம்

🕔 October 13, 2022

லங்கையில் கடந்த வருடத்தை விடவும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த வாரம் 1,152 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவல் அதிகரித்துள்ளமையினால் 36 பொது சுகாதார பரிசோதகர் நிர்வாக பிரிவுகளை அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 59,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் 19,912 நோயாளர்களே பதிவாகியிருந்தனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்