சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கடும் வீழ்ச்சி

🕔 May 2, 2022

நாட்டில் ஏப்ரல் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கிட்டத்தட்ட 43.3 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சின் தகவலுக்கிணங்க, ஏப்ரல் மாதம் இலங்கைக்கு 60,359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாதம் 106,500 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு 82,327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், பெப்ரவரியில் 96,507 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்