
நீதி அமைச்சர் அலி சப்றி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டம் நடந்து வரும் நிலையில் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
ஏற்கனவே நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்து வரும் மக்கள் எழுச்சி சூடு பிடித்துள்ளமையை அடுத்து, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் ராஜிநாமா செய்யவுள்ளனர் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த பதவி விலகல்கள் நடைபெற்று வருகின்றன.
தொடர்பான செய்தி: அமைச்சர் பதவியில் இருந்து நாமல் ராஜபக்ஷ ராஜிநாமா



