தலைப்புச் செய்திகள்

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ராஜிநாமா

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.

இன்று (03) இரவு அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதாக வெளியான செய்தியை, பிரதமர் அலுவலகம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத்துறை அமைச்சராகவும், டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில் முயற்சி அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு ராஜாங்க அமைச்சராகவும் நாமல் பதவி வகித்திருந்தார்.