
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானையில் உள்ள வீட்டுக்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் தினமும் மேற்கொள்ளப்படும் மின்வெட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரி குறித்த நபர் மின்மாற்றியில் ஏறிய பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



