தலைப்புச் செய்திகள்

இலங்கையில் சமூக ஊடகங்களுக்குத் தடை

இலங்கையில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளன.

நேற்று சனிக்கிழமை இரவு தொடக்கம் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, ஊரடங்கும் அமுலாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயெ தற்போது சமூக ஊடகஙங்கள் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன என்று, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் இன்று (03) காலை அறவித்துள்ளார்.