வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து பீரிஸ் நீக்கம்

🕔 March 22, 2022

வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார்.

அதற்கு பதிலாக, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் பீரிஸை ஜனாதிபதி மீண்டும் நியமித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் தெரிவிக்கையில்; அமைச்சின் பெயர் வெளியுறவு அமைச்சு என்பதிலிருந்து வெளிவிவகார அமைச்சு என மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், பேராசிரியர் பீரிஸின் மீள் நியமனம் மற்றும் வெளியுறவு அமைச்சின் பெயருக்கான திருத்தம் 2022 பெப்ரவரி 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்