ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு

🕔 March 2, 2022

ந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வழமையாக வருடத்தின் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடத்தில் பல முறை பிற்போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிலையில், இப்பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த ஜனவரி 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 05ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் குறித்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவரத்ன தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்