லொஹானுக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு

🕔 September 17, 2021

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து, உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த நிலையில், அங்கிருந்த சிறைக் கைதிகள் இருவரை முழங்காலில்இருக்க வைத்து, அவர்களிடம் கைத்துப்பாக்கியைக் காட்டி, சுட்டுக் கொல்லப் போவதாக அச்சுறுத்தினார் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

அதற்கு முன்னதாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவரின் நண்பர்களுடன் மதுபோதையுடன் சென்று, அங்கிருந்த உத்தியோகத்தர்களிடம் முறைகேடாக நடந்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

இச்சம்பவங்கள் தொடர்பில் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

தொடர்பான செய்தி: சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜிநாமா: ஆனாலும் அமைச்சராக பதவி வகிப்பார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்