தலைப்புச் செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற, இணைய வழி ஊடான அமைச்சரவைக் கூட்டம்

லங்கை வரலாற்றில் முதன் முறையாக அமைச்சரவைக் கூட்மொன்று, இணைய வழி வீடியோ தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இந்த இணையவழி அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டனர்.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது விஜேராம இல்லத்திலிருந்து இணையவழி அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்ற போது எடுக்கப்பட்ட படங்கள், அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.