மஹர சிறைக் கலவரத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழப்பு

🕔 December 1, 2020

ஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மோதலில் காயமடைந்த 107 பேர் தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்