
அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அதனை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 09 பேர் ஆதரிக்கவுள்ளனர் என, அரசாங்கப் பத்திகையான ‘சன்டே ஒப்சர்வர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு தரப்பைச் சேர்ந்த ஒன்பது – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக, அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருக்கு உறுதியளித்துள்ளனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 வது திருத்தத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு, குறைந்தபட்சம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவரின் ஆதரவு அரசாங்கத்துக்குத் தேவையாகவுள்ளது.



