நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை: குழுவை நியமித்தது மக்கள் காங்கிரஸ்

🕔 August 28, 2020

கில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம். நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் அரசியல் அதிகாரபீடம் நேற்று முன்தினம் புதன்கிழமை கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத் ஆகியோர், இந்த ஒழுக்காற்று விசாரணைக் குழுவில் இடம்பெறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கமைய, அண்மையில் ஏ.எம்.எம். நௌஷாட் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமையை, கட்சியின் அதிகாரபீடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

தொடர்பான செய்தி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நௌஷாட் இடைநிறுத்தம்; கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கம்

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்