அட்டாளைச்சேனை பாடசாலைகளைப் புறக்கணிக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்; அதே ஊரில் ‘ரியுசன்’ கொடுத்து சம்பாதிப்பதாக புகார்

🕔 January 4, 2020

– அஹமட் –

க்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்ச்சியாக அட்டாளைச்சேனை பிரதேசத்தைப் புறக்கணித்து வருகின்ற போதும், அட்டாளைச்சேனையில் தனியார் வகுப்புகளை நடத்தி காசு பார்ப்பதில், எவ்விதப் புறக்கணிப்புகளையும் அவர் செய்வதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையிலும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலும் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டும் விழாக்களை, அக்கரைப்பற்று வலயத்திலுள்ள அநேகமான பாடசாலைகள் நடத்தின.

இந்த நிலையில், அட்டாளைச்சேனையில் இவ்வாறான விழாக்களை நடத்திய பாடசாலை நிருவாகத்தினர், குறித்த விழாக்களில் கலந்து கொள்ளுமாறு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரை அழைத்திருந்த போதும், அவர் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற எந்தவொரு பாடசாலை விழாவிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்தார்.

ஆனால், அக்கரைப்பற்று பாடசாலைகளில் நடைபெற்ற இவ்வாறான விழாக்களில் அவர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். றஹ்மதுல்லா, இவ்வாறு அட்டாளைச்சேனைப் பாடசாலைகளை புறக்கணித்து வருகின்ற போதும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில் (ரியுசன் கிளாஸ்) படித்துக் கொடுத்து, பணம் பெற்றுக் கொள்வதில் மட்டும், புறக்கணிப்புகளையோ அலட்சியங்களையோ காட்டுவதில்லை என்றும், இவர் தொடர்பில் புகார் தெரிவிப்போர் கூறுகின்றனர்.

தனியார் வகுப்புகளில் பணத்துக்காக படித்துக் கொடுக்கும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், அதற்குரிய அனுமதியை தமது திணைக்களத்திடம் பெற்றுள்ளாரா என்கிற கேள்விகளையும் சிலர் முன்வைக்கின்றனர்.

தொடர்பான செய்தி: பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்