
நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை இன்று புதன்கிழமை காலை பொறுப்பேற்றுள்ளனர்.
முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தமை அறிந்ததே.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கபீர் ஹாசீம் மற்றும் ஹலீம் ஆகியோர் மட்டும் தமது பதவிகளை மீண்டும் இன்று பொறுப்பேற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாவர்.
ராஜிநாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் – மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போதும், அதில் தீர்மானம் எவையும் எட்டப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையிலேயே, மேற்படி இருவரும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.
அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் என, மொத்தமாக 09 பேர் கூட்டாக ராஜிநாமா செய்திருந்தனர்.
தொடர்பான செய்தி: மீண்டும் அமைச்சர்களாகும் முஸ்லிம்கள்: ராஜிநாமாவால் சாதித்தது என்ன?



