மீண்டும் அமைச்சர்களாகும் முஸ்லிம்கள்: ராஜிநாமாவால் சாதித்தது என்ன?

🕔 June 16, 2019

– அஹமட் –

ங்களுடைய அமைச்சுப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புகளை பெற்றுக்கொள்வதற்கான முஸ்தீபுகளை எடுத்து வருகின்றனர்.

இதற்காக நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்துப் பேசவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்திருக்கிறார்.

மகா சங்கத்தினருடன் இது தொடர்பில் பேசியதாகவும், பல்வேறு தரப்பினரும் அமைச்சுப் பதவிகளை மீளவும் பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் ஹலீம் கூறியுள்ளார்.

இதேவேளை, கபீர் ஹாசீம் அமைச்சுப் பொறுப்பை ஏற்கவேண்டுமெனக் கூறி, நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, மகா சங்கத்தினரை தான் சந்தித்ததாகவும் அவர்களின் ஆலோசனையின் படி, எதிர்கால நடிவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறாயின், முஸ்லிம் அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை ஏன் ராஜிநாமா செய்தார்கள்? அவர்களின் ராஜிநாமாவின் மூலம் ஏதாவது பயன்கள் முஸ்லிம் சமூகத்துக்கு கிட்டியுள்ளனவா? என்கிற கேள்விகள் இங்கு முக்கியமானவை.

மறைமுகமாக ஹபாயாவை தடைசெய்யும் விதமாக, அரச பணியாளர்களின் ஆடை விவகாரத்தில் பொது நிருவாக அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை இன்னும் ரத்துச் செய்யப்படவில்லை.

போதாக்குறைக்கு, அறபு மொழியை பொதுப் பயன்பாட்டில் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இப்படி, முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்குவாரங்கள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் இருக்கையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுப்பது என்பது, வெறும் ஏமாற்று நடவடிக்கையாகும் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனவே, முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா அர்த்தமுள்ளதாக அமையுமாறு பார்த்துக்கொள்தல், சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும்.

வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்காக அவர்கள் இதனைச் செய்ததாக இருந்து விடக் கூடாது என்பதே, முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்