வட கொரியத் தலைவர், சீனாவுக்கு ரயிலில் பயணம்

🕔 January 8, 2019

ட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சீன தலைவர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.

நேற்று திங்கள்கிழமை வட கொரியத் தலைவர்  சீனாவுக்கு புறப்பட்டார். சீனாவில் தனது மனைவி ரி-சொல்-ஜூவுடன் ஜனவரி 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை இருப்பார் என வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வசதிகளுடனும், சில மூத்த வட கொரிய அதிகாரிகளுடனும் வட கொரியத் தலைவர் கிம் சீனாவுக்கு பயணித்துள்ளார்.

ஒரு வருடத்துக்குள் நான்காவது முறையாக அவர் சீனா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவுடன் ராஜதந்திர உறவிலும், வர்த்தக உறவிலும் முக்கிய நட்பு நாடாக சீனா விளங்குகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்