மைத்திரி ஜனாதிபதியாகி 04 வருடங்கள் பூர்த்தி

🕔 January 8, 2019

னாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.

இதனையொட்டி ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரவும் இன்று காலையிலும் மத அனுஷ்டானங்கள்இடம்பெற்றன. மேலும் நாடுபூராகவும் இன்றைய தினம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுமுள்ளன.

இதேவேளை, மொரஹாகந்த நீர்த்தேக்கத் திட்டத்தால் இல்லாமல் ​போன பழைய லக்கல நகருக்கு பதிலாக  புதிய லக்கல நகரத்தை ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார்.

மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறுவுனரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 120ஆவது பிறந்த தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்கிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்