தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம்

🕔 January 8, 2019

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரா சாந்த பண்டார இன்று செவ்வாய்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநராகும் பொருட்டு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் 21ஆக காணப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களின் தொகை 20ஆக குறைந்துள்ளது.

குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்த பண்டார, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பிரதி சபாநாயகர் முன்னிலையில் இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்