ஆடைத் தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால், அங்கு வைக்கப்பட்டிருந்த 05 கோடி ரூபாய் பெறுமதியான ஆடைகள் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி – தங்கெதர பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதுவருட காலத்தை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக குறித்த ஆடைகள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், காலி மாநகரசபை மற்றும் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையினால் தீயணைக்கப்பட்டது. ஆயினும் களஞ்சியசாலை முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து இன்றும் அறியப்படவில்லை.



