தேவையேற்பட்டால் பதவி விலகத் தயார்: ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

🕔 April 6, 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திரகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேவையேற்படின் தங்கள் அமைச்சுப் பதவிகளைத் துறப்பதற்குத் தயாராக உள்ளனர் என்று, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அறிக்கையொன்றினைத் தயாரிப்பதற்கு குழுவொன்றினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அமைத்துள்ளது. அந்தக் குழு கண்டறிந்துள்ள விடயங்களின் அடிப்படையில்தான், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக சுதந்திரக் கட்சியினர் வாக்களித்தனர்.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதமரின் நடத்தை தொடர்பில் பிரச்சினை உள்ளது. ஆனால், அவர்களுக்கு பிரதமருடன் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை” என்றார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவே, ராஜாங்க அமைச்சர் அபேவர்த்தன வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்