பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க

🕔 March 19, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நிறைவேற்றுவதில், தாம் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோரும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என, தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

அதன் பின்னர், அரசியலரங்கில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன என்று தெரிவித்துள்ள அமைச்சர், தற்போதைக்கு அமைச்சரவையில் அவசரமாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார்.

வலப்பன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அமைச்சர் திசாநாயக்க இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்