பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகி விடுவார்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

🕔 March 19, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர்,  பதவியை அவர் ராஜினாமா செய்துவிடுவார் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான  வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னதாக, பிரதமர் ரணில் பதவி விலகுவார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இந்த வாரத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

மக்களின் நலனை கருத்திற் கொள்ளாத பிரதமரை நீக்குவதுதான், கூட்டு எதிர்க்கட்சியின் திட்டமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கவும் சிலர் திட்டமிட்டுள்ளனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்