ஐ.தே.கட்சி அமைச்சர்கள் தேர்தலின் பின்னர் கைது செய்யப்படலாம்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

🕔 February 6, 2018

– முன்ஸிப் அஹமட் –

ள்ளுராட்சித் தேர்தல் நிறைவடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

பொத்துவிலில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட தேர்தல் பிரசார மேடையில் உரைாயாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தார்;

“இந்த ஆட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி தூக்கியெறியப்படலாம். சில வேளைகளில், பிரதம மந்திரியின் பதவி கூட பறிக்கப்படலாம்.

மத்திய வங்கி ஊழலில் சம்பந்தப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர், சில தினங்களில் கைது செய்யப்படவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் மீது இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், அவர்களுடன் சேர்ந்திருப்பவர்களின் அமைச்சுப் பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

மேலும், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறுவத்கும், இன்னும் பல ஆண்டுகள் செல்லக் கூடும்” என்றார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்