உங்கள் ஒருவரையும் மிச்சம் வைக்க மாட்டேன்: கூச்சலிட்டவர்களை நோக்கி, மு.கா. தலைவர் அச்சுறுத்தல்

🕔 February 6, 2018

– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று திங்கட்கிழமை இரவு மூதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, அவரைப் பேச விடாமல், அங்கு திரண்டிருந்த மக்கள் கூச்சல் எழுப்பினர்.

இதன்போது ஆத்திரமடைந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர், கூச்சலிட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றினார்.

“எங்களோடு வம்புக்கு வந்தால், வாங்கிக் கட்ட வேண்டி வரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான அட்டகாசங்களை நாங்கள் ஏராளமாகப் பார்த்திருக்கின்றோம்.

மூதூரில் வந்து ஊளையிடுகின்றவர்களின் வால்களை, ஒட்ட நறுக்கி ஓட விடுகின்ற வேலையை, மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிச் செய்வேன்.

வேண்டாமானால், மேடையை விட்டும் நான் இறங்கி வருகின்றேன். இயலுமானால் ஊளையிடுங்கள் பார்க்கலாம்.

நாங்கள் இன்று நினைத்தால், உங்கள் ஒருவரையும் மிச்சம் வைக்காமல், தகுந்த பாடத்தை எங்களால் படிப்பிக்க முடியும்.

இப்போது ஊளையிட்டுப் பார்க்கட்டும், வாங்கிக் கட்டுகிறார்களா இல்லையா என்று பார்ப்போம்.

வலிய வம்புக்குப் போக மாட்டோம். வந்த வம்பினை விடவும் மாட்டோம்” என்றார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்