ஆடை களையச் சவால் விட்ட றகீப் லோயரும், வெட்கம் கெட்ட கதை சொன்ன ஐ.பி. ரஹ்மானும்: உள்ளுர் புதினம்

🕔 February 2, 2018

– மரைக்கார் –

ருதமுனை பிரதேசத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஐ.பி. ரஹ்மான் அழைத்து வந்தால், தான் ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, பகிரங்கமாக மக்கள் முன் நிர்வாணமாக நிற்பேன் என்று, சட்டத்தரணி ரகீப் சவால் ஒன்றினை விடுத்திருந்தார்.

ஐ.பி. ரஹ்மான் எனப்படுகின்ற இஸட்.எச்.ஏ. ரஹ்மான் மருதமுனையைச் சேர்ந்தவர். முன்னாள் பொலிஸ் அதிகாரி. தற்போது கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கல்முனை மாநகரச சபை உறுப்பினராகவும் கடந்த முறை பதவி வகித்திருந்தார்.

சட்டத்தரணி ஏ.எம். றகீப் என்பவரும் மருதமுனைக்காரர். கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர். மு.காங்கிரஸ் சார்பாக இம்முனையும் யானைச் சின்னத்தில் கல்முனை மாநகரச சபைக்கான தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தருவதாகவும், சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மேடையேறவுள்ளதாகவும் ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன.

இந்த நிலையில், மருதமுனைக்கும் ஜனாதிபதி வருவார் என்று – ரஹ்மான் கூறிக் கொண்டு, அதற்கான ஏற்பாடுகளையும் மருதமுனையில் மேற்கொண்டு வந்தார்.

இதன்போதுதான், “மருதமுனைக்கு ஜனாதிபதி வந்தால், நான் ஆடைகளைக் களைந்து விட்டு நிர்மாணமாக, மக்கள் முன் தோன்றுவேன்” என்று, சட்டத்தரணி றகீப் சவால் விடுத்திருக்கின்றார்.

 

ஆனால், றகீப்பின் கெட்ட காலம், மருதமுனைக்கு ஜனாதிபதியை ரஹ்மான் புதன்கிழமையன்று அழைத்து வந்து விட்டார்.

அது மட்டுமல்ல, மேடையில் வைத்தே, றகீப் லோயரின் இந்த சவாலினை நினைவுபடுத்திய ரஹ்மான், றகீப் லோயரை கிண்டலடிக்கும் வகையில், ஒரு ‘வெட்கம் கெட்ட’ கதையினையும் கூறியிருக்கின்றார்.

பெண்கள் உட்பட பலரும் கூடியிருந்த இடத்தில் ரஹ்மான் கூறிய அந்த நையாண்டிக் கதை, பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

எழுத்திலும், பேச்சிலும் ரஹ்மான் கொஞ்சம் ஒழுக்கம் பேண வேண்டும் என்பது, பலரினதும் கருத்தாக உள்ளது.

இன்னொருபுறம், எடுத்ததுக்கெல்லாம் ஆடை களைவேன் என்று, சவால் விடும் பழக்கத்தை றகீப் லோயர் போன்றவர்களும் கை விட வேண்டும்.

தான் விடுத்த சவாலை நிறைவேற்றுவதற்கு றகீப் லோயர் முன்வந்தாலும், அந்தக் கண்றாவியைக் காண மக்கள் தயாரில்லை.

மேலும், றகீப் லோயர் ஒன்றும் – சில்க் சுமிதாவும் இல்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்